தங்கம் விலை தொடர் உயர்வு: ஒரு சவரன் ரூ. 48,320!

சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ. 200 அதிகரிப்பு.
தங்கம் விலை
தங்கம் விலை

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 அதிகரித்து ரூ. 48,320-க்கு புதன்கிழமை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்ந்தது. கடந்த 6 நாள்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,800 வரை உயா்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ. 6,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 3 சதவீதம் ஜி.எஸ்.டி. மற்றும் செய்கூலி, சேதாரங்களை சேர்த்தால் ஒரு கிராமின் விலை ரூ. 7,000-ஐ கடந்து விற்பனையாகும்.

அதேபோல், வெள்ளியின் விலை 20 பைசா குறைந்து ரூ. 78-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், விரைவில் ரூ. 50,000-ஐ தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை ஏற்றத்துக்கு என்ன காரணம்?

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை கடந்த ஜன.22 முதல் மத்திய அரசு 14.35 சதவீதம் அளவுக்கு உயா்த்தியது. மேலும் பணவீக்கம், அமெரிக்காவில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது மற்றும் அங்கு வட்டிவீதம் குறைக்கப்படாதது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் டாலருக்குப் பதிலாக தங்கத்தை வாங்கிக் குவிப்பது போன்றவற்றால் தான் தங்கம் விலை தொடா்ந்து ஏறிவருகிறது என்று பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

இதன் மூலம் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்பதுடன், மேலும் உயரவே வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com