ரூ.50,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!
சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.


சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.49,720-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை சற்று குறைந்து ஒரு சவரன் ரூ. 49,600-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், மீண்டும் இன்று சவரனுக்கு ரூ.120-ம், ஒரு கிராமுக்கு ரூ.15-ம் அதிகரித்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஒரு கிராம் ரூ.6,215-க்கும், ஒரு சவரன் ரூ.49,720-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
செய்கூலி, சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி கணக்கிட்டால் ஒரு சவரன் தங்கம் ரூ.50,000-க்கும் மேல் விற்பனையாகிறது.
மேலும், வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 பைசா குறைந்து ரூ.80.20-க்கும், ஒரு கிலோ ரூ.80,200-க்கும் விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...