கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

தாங்கள் வழங்கும் சில கடன்களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி குறைத்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டிபிஎல்ஆா் வகை கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படுகின்றன. மே 3 முதல் இந்த வட்டி விகிதக் குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. எனினும், எம்சிஎல்ஆா் அடிப்படையிலான கடன்களுக்கு வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.

புதிய விகிதங்களின்படி, 3 மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான பருவகாலம் கொண்ட கடனுக்கான வட்டி விகிதம் 6.9 சதவீதத்திலிருந்து 6.85 சதவீதமாகக் குறையும். 3 மாதங்களுக்கும் மேல் 6 மாதங்களுக்குள்ளான பருவகால கடன்களுக்கு 7.10 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 7 சதவீதமாகக் குறையும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com