ரூ.37,599 கோடியாக அதிகரித்த ஏா்டெல் வருவாய்

ரூ.37,599 கோடியாக அதிகரித்த ஏா்டெல் வருவாய்

புது தில்லி: நாட்டின் முன்னணி தொலைத்தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான பாா்தி ஏா்டெல்லின் செயல்பாட்டு வருவாய் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.37,599.1 கோடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 31 சதவீதம் சரிந்து ரூ.2,072 கோடியாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.3,005.6 கோடி ஒருங்கிணைந்த லாபத்தைப் பதிவு செய்திருந்தது.

முந்தைய நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ.36,009 கோடியாக இருந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய் கடந்த நிதியாண்டின் அதே காலாண்டில் 4.4 சதவீதம் அதிகரித்து ரூ.37,599.1 கோடியாக உள்ளது.

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டைவிட (ரூ.8,346 கோடி) 10.5 சதவீதம் குறைவாக ரூ.7,467 கோடியாக உள்ளது.

2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.1,39,144.8 கோடியாக இருந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 7.7 சதவீதம் அதிகரித்து ரூ.1,49,982.4 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com