புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

புதிய உச்சம்: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் அதிகரிப்பு! 76 ஆயிரத்தை எட்டியது!

சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்ந்து 76,000 புள்ளிகளை எட்டியது.

News image
கோப்புப் படம்.
Updated On :27 மே 2024, 10:25 am

DIN

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 31 அமர்வுகளில் 76,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது.

இன்றைய வர்த்தகத்தில் 14 பங்குகள் ஏற்றத்திலும், மீதமுள்ளவை இறங்குமுகமாகவும் முடிவடைந்தது. பார்தி ஏர்டெல் 15 சதகவிகிதம் அதிகரித்து, சந்தை மூலதனத்தில் ரூ.1.13 லட்சம் கோடி உயர்ந்தது. அதைத் தொடர்ந்து மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் பவர் கிரிட் கார்ப் முறையே ரூ.62,000 கோடி மற்றும் ரூ.54,000 கோடி மதிப்புள்ள மூலதனம் அதிகரித்தது.

எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை தலா ரூ.33,000 கோடிக்கு மேல் சந்தை மூலதனத்தில் பங்களித்தன. அதே நேரத்தில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டாடா ஸ்டீல் லிமிடெட் முறையே ரூ.23,000 கோடி மற்றும் ரூ.12,000 கோடி பங்களித்தன.

இண்டஸ் இண்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, லார்சன் அண்ட் டூப்ரோ, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. விப்ரோ, என்.டி.பி.சி., மாருதி ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தன.

ஹெச்சிஎல் டெக் அதிகபட்சமாக 12 சதகவிகிதம் வீழ்ச்சி கண்டதுடன், சந்தை மூலதனத்தில் சுமார் ரூ.52,500 கோடியை இழந்தது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் மற்றும் டைட்டன் லிமிடெட் ஆகியவை முறையே 3 சதகவிகிதம் மற்றும் 8 சதகவிகிதம் குறைந்து, சந்தை மூலதனத்தில் ரூ.44,000 கோடி மற்றும் ரூ.3,000 கோடியை இழந்தன.

சன் பார்மா மற்றும் எல் அண்ட் டி முறையே ரூ.27,000 கோடி மற்றும் ரூ.24,000 கோடியை இழந்தன. ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை இந்த காலகட்டத்தில் சந்தை மூலதனத்தில் தலா ரூ.21,000 கோடியை இழந்தன.

ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை ஏற்றத்தில் வர்த்தகமானது.

உலகளாவிய கச்சா எண்ணெய் 0.13 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 82.23 டாலராக அதிகரித்துள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை ரூ.944.83 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.