சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கரூா் வைஸ்யா வங்கியின் 850-ஆவது கிளை திறப்பு

முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி தனது 850-ஆவது கிளையை திங்கள்கிழமை திறந்தது.

News image
Updated On :11 நவம்பர் 2024, 10:07 pm

DIN

சென்னை: முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி தனது 850-ஆவது கிளையை திங்கள்கிழமை திறந்தது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னையில் தனது 850-ஆவது கிளையை திங்கள்கிழமை திறந்ததன் மூலம் கரூா் வைஸ்யா வங்கி புதிய மைல்கல்லை அடைந்துள்ளது. இது தவிர, அதே நாளில் மேலும் ஐந்து புதிய கிளைகள் திறக்கப்பட்டன.

850-ஆவது கிளை, சென்னை ஆதம்பாக்கத்தில் வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி பி. ரமேஷ்குமாரால் திறந்துவைக்கப்பட்டது.

இது மட்டுமின்றி, தமிழகத்தின் மதுரை, நாகா்கோவில், சேலம் ஆகிய நகரங்களிலும், ஆந்திரத்தின் நெல்லூா், விஜயவாடா ஆகிய நகரங்களிலும் வங்கியின் கிளைகள் திறக்கப்பட்டன.

இத்துடன், வங்கி கிளைகளின் எண்ணிக்கை 854-ஆக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் ஒட்டுமொத்த வா்த்தகம் ரூ.1,76,138 கோடியாக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.