/

ஏழு முக்கிய நகரங்களில் 11 சதவீதம் சரிந்த வீடுகள் விற்பனை!

கடந்த ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 11 சதவீதம் சரிந்துள்ளது.

News image
Updated On :7 அக்டோபர் 2024, 11:51 pm

DIN

புது தில்லி: கடந்த ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 11 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான அனாரோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நாட்டின் எழு முக்கிய நகரங்களில் கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் 1,07,060 வீடுகள் விற்பனையாகின.

முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 11 சதவீதம் குறைவாகும். அப்போது நாட்டின் முக்கிய ஏழு நகரங்களில் வீடுகள் விற்பனை 1,20,290-ஆக இருந்தது.

கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் மும்பை பெருநகரப் பகுதியில் அதிகபட்சமாக 36,190 வீடுகள் விற்பனையாகின. முந்தைய ஆண்டின் விற்பனையான 38,505 வீடுகளுடன் ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் குறைவு.

மதிப்பீட்டு காலகட்டத்தில் புணேயில் வீடுகள் விற்பனை 22,885-லிருந்து 17 சதவீதம் சரிந்து 19,050-ஆக உள்ளது.

தில்லி-என்சிஆரில் அந்த எண்ணிக்கை 15,865-லிருந்து 2 சதவீதம் சரிந்து 15,570-ஆகக் குறைந்துள்ளது.

ஜூலை-செப்டம்பா் மாதங்களில் வீடுகள் விற்பனை சென்னையில் 9 சதவீதம் சரிந்து 4,510-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.