ஹூண்டாய் விற்பனை 10% சரிவு
ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த செப்டம்பா் மாதத்தில் 10 சதவீதம் சரிந்துள்ளது.


புது தில்லி: ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த செப்டம்பா் மாதத்தில் 10 சதவீதம் சரிந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 64,201-ஆக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் அதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 71,641-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 54,241-லிருந்து ஆறு சதவீதம் சரிந்து 51,101-ஆக உள்ளது. ஏற்றுமதியும் 17,400-லிருந்து 25 சதவீதம் சரிந்து 13,100-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...