கோலாலம்பூர் - கொல்கத்தா நேரடி விமான சேவையைத் தொடங்கும் மலேசிய ஏர்லைன்ஸ்!
மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் டிசம்பர் 2 முதல் கோலாலம்பூர் மற்றும் கொல்கத்தா இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளது.


மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் டிசம்பர் 2 முதல் கோலாலம்பூர் மற்றும் கொல்கத்தா இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளது.
தற்போது, கோலாலம்பூரை நேரடியாக புது தில்லி, பெங்களூரு, மும்பை, சென்னை, ஹைதராபாத், கொச்சி, அமிர்தசரஸ், திருவனந்தபுரம் மற்றும் அகமதாபாத் ஆகிய ஒன்பது இந்திய நகரங்களுடன் இணைக்கிறது.
டிசம்பர் 2 முதல் கோலாலம்பூர்-கொல்கத்தா வழித்தடத்தில் போயிங் 737-800 விமானங்களுடன் வாரத்திற்கு ஐந்து விமானங்கள் இயக்கப்படும் என்று விமான நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மலேசிய ஏர்லைன்ஸ் 2006 ஆம் ஆண்டில் கொல்கத்தாவுக்கான நேரடி விமான சேவையை நிறுத்தியது.
கோலாலம்பூர்-கொல்கத்தா சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டவுடன், இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையே 76 வாராந்திர விமான சேவைகள் வழங்கப்படும். தற்போது 71 வாராந்திர விமான சேவைகளை இயக்கி வருகிறது மலேசிய ஏர்லைன்ஸ்.
இந்தியா எப்போதும் எங்களுக்கு ஒரு முக்கிய சந்தையாகும். எங்கள் நெட்வொர்க்கை தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலம், மலேசியா ஏர்லைன்ஸ் சிறந்த விருந்தோம்பலுடன், விதிவிலக்கான பயண அனுபவங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றார் மலேசியா ஏவியேஷன் குழுமத்தின் விமான தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் லுக்மான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...