வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 150 புள்ளிகளும், நிஃப்டி 50 புள்ளிகளும் சரிவுடன் இருந்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 151.48 புள்ளிகள் சரிந்து 82,201.16 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.18 சதவீதம் சரிவாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 53.60 புள்ளிகள் சரிந்து 25,145.10 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.21 சதவீதம் சரிவாகும்.
உலகளாவிய கலவையான சந்தைக் குறிப்புகளால் இன்றைய பங்குச்சந்தை வணிகம் பெரிதும் மாற்றமின்றி காணப்பட்டது. சென்செஸ்
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 9 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 21 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் முடிந்தன.
அதிகபட்சமாக டைட்டன் கம்பெனி 3.20% சதவீத பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. அதற்கு அடுத்தபடியாக ஐடிசி 0.96%, இன்ஃபோசிஸ் 0.56%, டாடா ஸ்டீல் 0.36%, எச்.சி.எல். டெக் 0.30%, எஸ்பிஐ 0.28%, ஆக்சிஸ் வங்கி 0.25%, எச்.டி.எஃப்.சி. 0.23%, ஏசியன் பெயிண்ட்ஸ் 0.21% உயர்ந்திருந்தன.
இதேபோன்று ரிலையன்ஸ் பங்குகள் அதிகபட்சமாக 1.43% சரிந்திருந்தன. இதனைத் தொடர்ந்து நெஸ்ட்லே 1.18%, டாடா மோட்டார்ஸ் 1.05%, எம்&எம் 0.97%, ஜே.எஸ். டபிள்யூ ஸ்டீல் 0.82%, இந்தஸ்இந்த் வங்கி 0.81% பங்குகள் சரிவுடன் இருந்தன.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியில் உள்ள 50 தரப் பங்குகளில் அதிகபட்சமாக டைட்டன் கம்பெனி 3.20% பங்குகள் உயர்ந்திருந்தன. அதற்கு அடுத்தபடியாக எல்டிஐ மைன்ட்ரீ 1.29%, விப்ரோ 1.10%, பிபிசிஎல் 0.97%, ஐடிசி 0.96%, ஹீரோ மோட்டார்ஸ் 0.89%, இன்ஃபோசிஸ் 0.56%, ஹிண்டல்கோ 0.48% பங்குகள் உயர்வுடன் இருந்தன.