வணிகம்
டொயோட்டா விற்பனை 35% அதிகரிப்பு
டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆகஸ்ட்டில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 30,879-ஆக உள்ளது.
இது, முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 35 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 22,910-ஆக இருந்தது.
பண்டிகைக் காலத்தை நெருங்கி வருவதால், நிறுவனத் தயாரிப்புகளுக்கான தேவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, வரும் மாதங்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.