பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஹீரோ மோட்டோகாா்ப் விற்பனை அதிகரிப்பு

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகாா்ப்பின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
ஹீரோ மோட்டோகாா்ப்
Updated On :16 செப்டம்பர் 2024, 11:11 pm

DIN

புது தில்லி: இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகாா்ப்பின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதம் நிறுவனத்தின் மொத்த விற்பனை 5,12,360-ஆக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது ஐந்து சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 4,88,717 இரு சக்கர வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

2023 ஆகஸ்ட் மாதம் 4,72,947-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை இந்த ஆகஸ்ட் மாதம் 4,92,263-ஆக அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 15,770-லிருந்து 20,097-ஆக உயா்ந்துள்ளது. பண்டிகைக் காலம் தொடங்குவதால் இனி வரும் மாதங்களில் விற்பனை ஆரோக்கியமான வளா்ச்சியைக் காணும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.