பட்ஜெட் விலையில் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ! இந்தியாவில் கிடைக்குமா?

பட்ஜெட் விலையில் நிறைவான அம்சங்களுடன் கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக உள்ளது மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ.
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ நன்றி - மோட்டோரோலா
Published on
Updated on
1 min read

மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன், பட்ஜெட் விலையில் நிறைவான அம்சங்களுடன் கிடைக்ககூடிய ஸ்மார்ட்போனாக உள்ளது.

இதன் சிறப்பம்சங்கள் குறித்து தகவல் வெளியான நிலையில், இந்தியாவில் தற்போது அறிமுகமாகுமா? என்ற கேள்வி பயனர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மோட்டோரோலா நிறுவனம் தயாரிக்கும் ஸ்மார்ட்போன்கள், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலும் உள்ளது.

இந்திய சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றுள்ள மோட்டோரோலா நிறுவனம் தற்போது எட்ஜ் 60 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. முதலில் அமெரிக்காவில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன், படிப்படியாக இந்திய சந்தைகளில் கிடைக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்து இணையத்தில் பல்வேறுவிதமான தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், உண்மையான சிறப்புகள் என்னென்ன என்பது குறித்து காணலாம்.

  • எட்ஜ் 60 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன் 6.7 அங்குல திரை கொண்டது. அமோல்ட் ( AMOLED) அம்சத்துடன் பயன்படுத்துவதற்கு சுமுகமாக இருக்கும் வகையில் 144 Hz திறன் கொண்டது.

  • மீடியாடெக் டைமன்சிட்டி 8350 புராசஸருடன் 12GB செயலிகளுக்கான உள்நினைவகத்தையும் 512GB கோப்புகளுக்கான நினைவகத்தையும் கொண்டுள்ளது.

  • மோட்டோரோலாவில் மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதைப் போன்று 5,100 mAh பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது. 68W வேகமாக சார்ஜ் செய்யும் சிறப்பு உடையது.

புற வடிவத்தின் சிறப்பு

மற்ற ஸ்மார்ட்போன்களைப் போல் அல்லாமல், தோல் வடிவ புறத்தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், பின்புறத்தில் கூடுதலாக எந்தவொரு பாதுகாப்பு கவசங்களும் தேவைப்படாது. திரையிலேயே விரல் தொடுகை சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை

முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகமாகும் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ, இந்திய சந்தையில் ரூ. 31,999-க்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் தேதி குறித்து எந்தவொரு தகவலையும் மோட்டோரோலா இதுவரை உறுதிப்படுத்தவில்லை. எனினும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | 22 நாள்கள் பேட்டரி தாங்கும் திறன்! விவோவின் புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com