திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

22 நாள்கள் பேட்டரி தாங்கும் திறன்! விவோவின் புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்!

தனித்துவமாக 22 நாள்கள் பேட்டரி திறன் கொண்டது விவோ ஸ்மார்ட் வாட்ச்.

News image

விவோ ஸ்மார்ட் வாட்ச் 5 - நன்றி - விவோ

Updated On :22 ஏப்ரல் 2025, 6:36 pm IST

விவோ நிறுவனம் சிறந்த பேட்டரி திறனுடன் புதிய ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி நிறுவனம் நேற்று புதிய ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்த நிலையில், இன்று (ஏப். 22) விவோ நிறுவனம் அதிக நாள்கள் பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்சை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம் ஸ்மார்ட்போன்களை மட்டுமின்றி, ஸ்மார்ட் வாட்ச்களையும் தயாரித்து வருகிறது.

அந்தவகையில் இன்று 1.43 அங்குல திரையுடன் கூடிய புதிய வாட்ச் -5ஐ அறிமுகம் செய்துள்ளது. விற்பனையில் தனித்துவமாக விளங்கும் வகையில், 22 நாள்கள் பேட்டரி திறன் கொண்டது.

சிறப்புகள் என்னென்ன?

விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இதே நாளில், விவோவில் எக்ஸ் 200 அல்ட்ரா, எக்ஸ் 200 அல்ட்ரா எஸ் என்ற இரு ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஸ்மார்ட் வாட்ச், 1.43 அங்குல (3.63 செ.மீ.) திரை கொண்டது. திரையை அணைக்காமல், வெளிச்சத்துடன் வைத்திருந்தால்கூட 22 நாள்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தலாம்.

எண்ணற்ற செய்யறிவு தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கியது. உடலில் ரத்த அழுத்தத்தை 30 விநாடிகளில் கணக்கிட்டு கூறும் வகையில் புளூ ஓஎஸ் 2.0. கொண்டுள்ளது. இதேபோன்று தூக்க நிலை மற்றும் இதயத் துடிப்புகளையும் கணக்கிடும் அம்சம் கொண்டது.

விலை எவ்வளவு?

புதிய ஸ்மாட் வாட்ச்சானது சிலிகானால் ஆன பட்டையுடன் வருகிறது. இதனால் இதன் விலை ரூ. 9300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே அம்சத்தில் தோல் பட்டையுடன் வேண்டுமானால் ரூ. 11,600 செலுத்த வேண்டும்.

இரு வேறு வண்ணங்களைக் கொண்டுள்ளது. தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் விற்பனை ஏப். 29 முதல் தொடங்கும்.

தற்போது முதல்கட்டமாக சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.