

புதுதில்லி: அமெரிக்காவை தளமாகக் கொண்ட முதலீட்டு நிறுவனமான ஜிக்யூஜி பார்ட்னர்ஸ் நிறுவனம் திறந்த சந்தை பரிவர்த்தனை மூலம் ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜியின் பங்குகளை ரூ.676 கோடிக்கு விற்றுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.
ராஜீவ் ஜெயின் ஆதரவு பெற்ற ஜிக்யூஜி பார்ட்னர்ஸ், அதன் துணை நிறுவனமான ஜிக்யூஜி பார்ட்னர்ஸ் எமர்ஜிங் மார்க்கெட்ஸ் ஈக்விட்டி ஃபண்ட் மூலம் 1.52 கோடிக்கும் அதிகமான பங்குகளை தலா ரூ.444 என்று விற்பனை செய்ததில், அதன் பரிவர்த்தனை மதிப்பு ரூ.676.69 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
சமீபத்திய பரிவர்த்தனைக்குப் பிறகு, ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி-யில் ஜிக்யூஜி பார்ட்னர்ஸ் வைத்திருக்கும் பங்குகள் 1.79 சதவிகிதத்திலிருந்து 0.92 சதவிகிதமாக சரிந்தது. இதனையடுத்து ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜியின் பங்குகள் பிஎஸ்இ-யில் 0.44% சரிந்து ரூ.451.60 ஆக முடிவடைந்தன.
செலவுகள் அதிகரித்ததன் காரணமாக, அக்டோபரில், ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி-யின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 17% குறைந்து ரூ.705 கோடியாக உள்ளது.
கடந்த ஆண்டு 2-வது காலாண்டில் நிறுவனமானது ரூ.853 கோடி நிகர லாபம் ஈட்டியதாக ஜேஎஸ்டபிள்யூ குழும நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலத்தில், நிறுவனத்தின் மொத்த வருவாயில் ஆண்டுக்கு ஆண்டு 59% உயர்ந்து ரூ.3,459 கோடியாக உள்ளது.
இதையும் படிக்க: டிஐஏ திட்டத்தின் கீழ் வைர இறக்குமதிக்கு வரி விலக்கு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.