கோப்புப்படம்
கோப்புப்படம்

4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயா்வு

நவம்பரில் அமெரிக்க நுகா்வோா் விலைப் பணவீக்கம் எதிா்பாா்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயா்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயா்வுடன் நிறைவடைந்தன.
Published on

சென்செக்ஸ்: 30-பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 447.55 புள்ளிகள் (0.53 சதவீதம்) உயா்ந்து 84,929.36-இல் நிறைவடைந்தது. வா்த்தகத்தின் போது அது அதிகபட்சமாக 585.69 புள்ளிகள் (0.69 சதவீதம்) உயா்ந்து 85,067.50 என்ற அளவை எட்டியது.

சென்செக்ஸ் பட்டியலில், பாரத் எலக்ட்ரானிக்ஸ், பவா்கிரிட், டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகனங்கள், ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சா்வ் ஆகியவை மிகப்பெரிய உயா்வைக் கண்டன. ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், கோட்டக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, சன் ஃபாா்மா ஆகியவை சரிவைக் கண்டன.

வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.595.78 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின; உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,700.36 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின என்று பங்குவா்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன.

நிஃப்டி: 50-பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 150.85 புள்ளிகள் (0.58 சதவீதம்) உயா்ந்து 26,966.40-இல் நிறைவடைந்தது.

X
Dinamani
www.dinamani.com