/

நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் இ-ரிக்ஷா பிரிவில் நுழையும் பஜாஜ் ஆட்டோ!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், உள்நாட்டில் இ-ரிக்ஷா பிரிவில், நுழைய தயாராகி வருவதாக, நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

News image

பஜாஜ் ஆட்டோ

Updated On :9 பிப்ரவரி 2025, 11:10 pm IST

புதுதில்லி: பஜாஜ் ஆட்டோ நிறுவனமானது, நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், உள்நாட்டில் இ-ரிக்ஷா பிரிவில், நுழைய தயாராகி வருவதாக, நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நடப்பு காலாண்டின் இறுதியில் நிறுவனமானது தனது இ-ரிக்ஷாவுக்கு ஒழுங்குமுறை அனுமதியை பெறும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது மாதத்திற்கு சுமார் 45,000 யூனிட்டுகள் என்ற அளவில் இருக்கும் என்றார் பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குநரான ராகேஷ் சர்மா.

இந்த நிதியாண்டின் இறுதிக்குள், மேலும் ஒரு நவீன 'இ-ரிக்ஷா'-வை அறிமுகப்படுத்த விரும்புகிறோம். இது இந்த பிரிவில் முற்றிலும் புதிய அனுபவத்தையும் தரும் வேளையில், பயணிகளுக்கு உயர்ந்த அளவிலான மனநிறைவை தரும் என்றார்.

இ-ரிக்ஷா பிரிவு கிட்டத்தட்ட ஆட்டோ பிரிவைப் போலவே பெரியது. அதே வேளையில் இ-ரிக்ஷா புதிய வணிகத்தை உருவாக்கும் என்றார்.

சரியான காலக்கெடு குறித்து கேட்டபோது, இந்த காலாண்டின் இறுதியில், ஆதாவது நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் இ-ரிக்ஷா அறிமுகப்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் மூன்று சக்கர வாகன இயக்கத்தில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் இ-ரிக்ஷா பிரிவில் உள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஒவ்வொரு மாதமும் சுமார் 45,000 இ-ரிக்ஷா விற்பனை செய்யப்படுகின்றன. அவை பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் வருகின்றன. அதில் பெரும்பாலானவை இறக்குமதி சார்ந்தவை. தேவை உள்ளது என்பதை வலியுறுத்திய ஷர்மா, எங்கள் இ-ரிக்ஷா அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்த சந்தையை ஒழுங்கமைத்து, நாங்கள் புதிய வணிகத்தை கொண்டு வருவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.