பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

முன்பதிவு தொடக்க நாளில் 30,179 புக்கிங்கை பெற்ற மஹிந்திரா!

மஹிந்திரா நிறுவனமானது தனது புதிய எக்ஸ்இவி 9 இ மற்றும் பிஇ 6 ஆகிய இரண்டு புதிய மின்சார மாடல்களுக்கு 30,179 முன்பதிவுகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

Published On :16 பிப்ரவரி 2025, 6:36 pm IST

புதுதில்லி: மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது புதிய எக்ஸ்இவி 9 இ மற்றும் பிஇ 6 ஆகிய இரண்டு மின்சார மாடல்களுக்கு 30,179 முன்பதிவுகளை பெற்றது.

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, எக்ஸ்இவி 9 இ மற்றும் பிஇ 6 ஆகிய மின்சார கார்களை அறிமுகம் செய்தது. இந்த நிலையில் விற்பனைக்காக அதிகாரப்பூர்வ புக்கிங் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய முதல் நாளே சுமார் 30,179 புக்கிங்களை பெற்று புதிய சாதனையை படைத்தது மஹிந்திரா.

எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6 கார்கள் விற்பனைக்காக அதிகாரப்பூர்வ புக்கிங்கில் புதிய சாதனையை படைத்துள்ள நிலையில், பிஇ 6 காருக்கு 44 சதவிகித முன்பதிவும், எக்ஸ்இவி - 9 இ காருக்கு 56 சதவிகித முன்பதிவும் கிடைக்க பெற்றது. இதன் விலையானது ரூ.18.9 லட்சம் முதல் ரூபாய் 30.5 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) என தெரியவந்துள்ளது.

இதில் 79 கிலோவாட் பேட்டரியைக் கொண்ட டாப்-எண்ட் பேக் த்ரீ, கார்களுக்கான மொத்த முன்பதிவு 73 சதவிகிதமாக இருந்தது.

இந்தியாவில் கடந்த ஆண்டு எலெக்ட்ரிக் பயணிகள் வாகன விற்பனை சுமார் 1 லட்சம் யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.