எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

சம்பள உயர்வை ஒத்திவைத்த இன்போசிஸ்!

ஐடி நிறுவனமான இன்போசிஸ் 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டின் வருடாந்திர சம்பள உயர்வை ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜனவரி 2025, 5:22 pm IST

புதுதில்லி: ஐடி நிறுவனமான இன்போசிஸ் 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டின் வருடாந்திர சம்பள உயர்வை ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது. நிறுவனமானது கடைசியாக நவம்பர் 2023ல் சம்பள உயர்வை அமல்படுத்தியிருந்தது.

வழக்கமாக ஆண்டின் தொடக்கத்தில் செயல்படுத்தப்படும் சம்பள உயர்வின் தாமதம், உள்நாட்டு தகவல் தொழில்நுட்பத் துறை இன்னும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்வதாக தெரிகிறது. மந்தநிலைக்கு மேற்கோள் காட்டப்பட்ட காரணமானது, ஜனவரி 20 முதல் செயல்படத் தொடங்கும் புதிய டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் வரும் மேக்ரோ-பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக, வாடிக்கையாளர்கள் தங்கள் ஐடி செலவினங்களை அதிகரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இன்போசிஸ் மட்டுமல்லாமல், ஹெச்சிஎல் டெக், எல்டிஐ மைண்ட்ட்ரீ மற்றும் எல் அண்ட் டி டெக் சர்வீசஸ் ஆகிய சில பெரிய ஐடி நிறுவனங்களும் செலவினங்களையும் மற்ற லாபங்களை நிர்வகிக்க இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சம்பளத்தை உயர்த்தவில்லை என்று தெரியவந்துள்ளது.

மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் பொறுத்தவரை, டிசம்பர் காலாண்டில் இன்போசிஸின் வருவாய் குறையக்கூடும். இதற்கு ஊழியர்கள் விடுப்பில் செல்வதும், வேலை நாட்கள் குறைவாக இருப்பதும் காரணமாக தெரிவிக்கப்பட்டது.

'ப்ராஜெக்ட் மேக்சிமஸ்' என்பது இன்போசிஸின் விளிம்பு மேம்பாட்டுத் மற்றும் செலவுகளைக் குறைக்கும் திட்டமாகும்.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் அதாவது ஜூலை மதல் செப்டம்பர் வரையான காலத்தில் நிறுவனத்தின் லாபம் 4.7 சதவிகிதம் உயர்ந்து ரூ.6,506 கோடியாக இருந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ.6,212 கோடியாக இருந்தது. இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் வருமானம் ரூ.40,986 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.38,994 கோடி ஆக இருந்தது. செப்டம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 3.75 சதவிகிதத்திலிருந்து 4.5 சதவிகிதமாக அதிகரித்தது.

இந்த நிலையில், ஐடி நிறுவனமான இன்போசிஸ் பங்கு ஒன்றுக்கு ரூ.21 ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.