கடும் வீழ்ச்சியில் ரூபாய் மதிப்பு! ரூ. 86.31

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று (ஜன. 13) ஒரே நாளில் 27 காசுகள் சரிந்து ரூ. 86. 31 காசுகளாக வணிகமாகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று (ஜன. 13) ஒரே நாளில் 27 காசுகள் சரிந்து ரூ. 86. 31 காசுகளாக வணிகமாகிறது.

கடைசி வணிக நாளான கடந்த வெள்ளிக்கிழமை ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ.86 ஆக முடிந்திருந்தது. இந்த எதிர்மறை நிலை இன்றைய வணிக நேரத் தொடக்கத்திலும் நீடித்து, கடுமையான சரிவைச் சந்தித்தது.

பங்குச் சந்தையில் உள்ளூர் முதலீட்டாளர்களிடையே நிலவிய எதிர்மறையான நிலை மற்றும் அந்நிய நிதி முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவை ரூபாய் மதிப்பு சரிந்ததற்கான காரணங்களாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால் கச்சா எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (ஜன. 13) பங்குச் சந்தை வணிகம் 0.9% சரிவுடன் தொடங்கியது.

அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை அதிகரிக்கும் என்ற அபாயம் நிலவுவதன் எதிரொலியாக ரூபாய் மதிப்பு வணிக நேரத் தொடக்கத்தில் ரூ. 86.12 காசுகளாக வணிகமானது.

பின்னர் படிப்படியாகச் சரிந்து, முந்தைய (வெள்ளிக்கிழமை) மதிப்பை விட விட 27 காசுகள் சரிந்து ரூ. 86.31 என்ற உச்சபட்ச சரிவை எட்டியது. (நண்பகல் 12 மணி நிலவரம்)

அந்நியச் செலாவணியில் வங்கிகளுக்கு இடையிலான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து, மார்ச் மாதத்தில் 87 ரூபாயை எட்டும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com