/

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்...

News image
தங்கம் விலை (கோப்புப்படம்)- din
Updated On :23 ஜனவரி 2025, 5:14 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. அந்த வகையில், திங்கள்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ. 120 உயர்ந்து ரூ.59,600-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் தங்கம் ரூ.7,450-க்கும், சவரன் ரூ.59,600-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமையான நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து, வரலாற்றின் முதல்முறையாக ரூ. 60,000-ஐ தங்கம் விலை கடந்தது.

ஒரு கிராம் தங்கம் ரூ. 7525-க்கும், ரூ. 60,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றும் அதே விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளி விலையும் தொடர்ந்து 7 ஆவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 104-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,04,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.