விப்ரோ: முதல் காலாண்டு வருவாய் 3% அதிகரிப்பு!

நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 9.8 சதவிகிதம் அதிகரித்ததையடுத்து, ஐடி சேவை நிறுவனமான விப்ரோவின் பங்குகள் கிட்டத்தட்ட 3% உயர்ந்து முடிவடைந்தன.
விப்ரோ நிறுவனம்
விப்ரோ நிறுவனம்
Published on
Updated on
1 min read

புதுதில்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.8 சதவிகிதம் அதிகரித்ததையடுத்து, ஐடி சேவை நிறுவனமான விப்ரோவின் பங்குகள் கிட்டத்தட்ட 3 சதவிகிதம் இன்று உயர்ந்து முடிந்தன.

நிறுவனத்தின் முடிவுகளை உற்சாகப்படுத்தும் விதமாக, பிஎஸ்இ-யில் பங்கின் விலை 4.43 சதவிகிதம் உயர்ந்து ரூ.271.80 ஆக இருந்தது. இறுதியாக 2.56 சதவிகிதம் உயர்ந்து ரூ.266.90 ஆக முடிந்தது.

என்எஸ்-யில் நிறுவனத்தின் பங்குகள் 2.20 சதவிகிதம் உயர்ந்து ரூ.266.35 ஆக முடிந்தது. இதனையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு ரூ.6,980.42 கோடி உயர்ந்து ரூ.2,79,782.74 கோடியாக முடிந்தது.

இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.8 சதவிகிதம் அதிகரித்து ரூ.3,336.5 கோடியாக உள்ளது.

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.3,036.6 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்ததாக தெரிவித்தது.

நிதியாண்டின் முதல் காலாண்டில் செயல்பாடுகளிலிருந்து கிடைத்த வருவாய் ரூ.21,963.8 கோடியாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு அது ரூ.22,134.6 கோடியாக இருந்தது.

தொடர்ச்சியாக, லாபம் மற்றும் வருவாய் முறையே 7 சதவிகிதம் மற்றும் 1.6 சதவிகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வங்கிப் பங்குகளின் வீழ்ச்சியை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

Shares of IT services firm Wipro ended nearly 3 per cent higher on Friday after it posted a 9.8 per cent increase in consolidated net profit during the April-June quarter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com