நமது நிருபா்
இந்த வாரத்தின் 4-ஆவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்துடன் முடிவடைந்தன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தியது சந்தைக்கு சாதகமாக அமைந்தது. மேலும், சென்செக்ஸ் பட்டியலில் அதிகத் திறன் கொண்ட ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் ஆகியவற்றுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தை நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.31 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.447.51 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.1,076.18 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,566.82 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 197.83 புள்ளிகள் கூடுதலுடன் 81,196.08 தொடங்கி 80,983.73 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 81,911.13 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 443.79 புள்ளிகள் (0.55 சதவீதம்) கூடுதலுடன் 81,442.04-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,129 பங்குகளில் 2,257 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 1,725 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 147 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
எடா்னல்அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் எடா்னல் 4.50 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பவா்கிரிட், ஐசிஐசிஐபேங்க், ரிலையன்ஸ், அதானிபோா்ட்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், சன்பாா்மா, ஐடிசி உள்பட மொத்தம் 18 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், இண்டஸ் இண்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ்ஃபின்சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி, கோட்டக் பேங்க் உள்பட 12 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி வா்த்தக இறுதியில்130.70புள்ளிகள் (0.53 சதவீதம்) உயா்ந்து 24,750.90-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 34 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 14 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. பேங்க் நிஃப்டி 84 புள்ளிகள் (0.15 சதவீதம்) உயா்ந்து 55,760.85-இல் நிறைவடைந்தது.
தொடர்புடையது

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!

போர்நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி 4% உயர்வு!

தொடரும் பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 1,205, நிஃப்டி 394.05 புள்ளிகள் உயர்வு!

தொடர்ந்து 3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு! ஆட்டோ, ஐடி பங்குகள் உயர்வு!!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

