உலகளாவிய ஏற்றத்தால் சென்செக்ஸ், நிஃப்டி 1% உயர்வுடன் முடிவு!

சென்செக்ஸ் 677.55 புள்ளிகள் உயர்ந்து 81,796.15 புள்ளிகளாகவும், 50 பங்குகளை கொண்ட நிஃப்டி 227.90 புள்ளிகள் உயர்ந்து 24,946.50 ஆக நிலைபெற்றது.
கோப்புப் படம்
கோப்புப் படம்ANI
Published on
Updated on
2 min read

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை சரிந்து நிலையில், முதலீட்டாளர்கள் ஐடி மற்றும் எண்ணெய் பங்குகளில் வெகுவாக கொள்முதல் செய்ததையடுத்து பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட 1 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.

காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 747.22 புள்ளிகள் உயர்ந்து 81,865.82 ஆக இருந்தது. முடிவில் 30 பங்குகளை கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 677.55 புள்ளிகள் உயர்ந்து 81,796.15 புள்ளிகளாகவும், 50 பங்குகளை கொண்ட நிஃப்டி 227.90 புள்ளிகள் உயர்ந்து 24,946.50 ஆக நிலைபெற்றது.

சென்செக்ஸில் ஆல்ட்ராடெக் சிமென்ட், டெக் மஹிந்திரா, எச்.சி.எல். டெக், டாடா கன்சல்டன்சி சரிவீஸ், எடர்னல், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் கோடக் மஹிந்திரா ஆகியவை உயர்ந்த நிலையில் டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் சன் பார்மா ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தது.

நிஃப்டி-யில் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், பாரத் எலக்ட்ரானிக்ஸ், எச்டிஎஃப்சி லைஃப், ஓஎன்ஜிசி ஆகிய பங்குகள் உயர்ந்த நிலையில் டாடா மோட்டார்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் சன் பார்மா ஆகியவை சரிந்து முடிவடைந்தன.

மே மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 0.39 சதவிகிதமாகக் குறைந்து இருந்த நிலையில், இது முந்தைய மாதத்தில் 0.85 சதவிகிதமாக இருந்தது. இது தொடர்ந்து மூன்றாவது மாதமாக சரிவை பதிவு செய்தது வருவது குறிப்பிடத்தக்கது.

வங்கி, எஃப்எம்சிஜி, மூலதன பொருட்கள், நுகர்வோர் பொருட்கள், ஐடி, உலோகம், ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவை 0.5 முதல் 1 சதவிகிதம் வரை உயர்ந்து முடிவடைந்தன.

ஓ.என்.ஜி.சி. இடமிருந்து ரூ.107.5 கோடி ஆர்டர் கிடைக்க பெற்றதால் யுனைடெட் டிரில்லிங் பங்குகள் 20 சதவிகிதமும், $800,000 ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற்றதால் ஆர்ச்சீஸ் பங்குகள் 9 சதவிகிதமும், பெங்களூரு ஹோஸ்கோட்டில் 14 ஏக்கர் நிலத்தை நிறுவனம் மேம்படுத்த போவதாக கோத்ரெஜ் பிராபர்டீஸ் தெரிவித்ததால் அதன் பங்குகளும் உயர்ந்தன.

அமிர்தசரஸில் 260 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியதால் ஒமக்ஸ் பங்குகள் 13%க்கும் அதிகமாக உயர்ந்து முடிவடைந்த நிலையில் நிறுவனத்திடம் (USFDA) யுஎஸ்எஃப்டிஏ படிவம் 483 ஐ வழங்கிய பிறகு நாட்கோ பார்மா பங்குகள் சரிந்து முடிந்தன.

மகாராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ், மேக்ஸ் பைனான்சியல், பாரத் எலக்ட்ரானிக்ஸ், லாரஸ் லேப்ஸ், மேக்ஸ் ஹெல்த்கேர், நாராயண ஹ்ருதாலய, முத்தூட் பைனான்ஸ், ராம்கோ சிமென்ட்ஸ், மணப்புரம் பைனான்ஸ், ஜேகே சிமென்ட் உள்ளிட்ட 100 பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தை பதிவு செய்தன.

ஆசிய சந்தைகளில் தென் கொரியா கோஸ்பி, ஜப்பான் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு, ஹாங்காங்கின் ஹாங் செங் மற்றும் ஐரோப்பிய சந்தைகளும் உயர்ந்து முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.81 சதவிதிதம் சரிந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு $73.63 ஆக உள்ளது.

உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருளின் விலைகள் குறைந்ததால், மே மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 0.39 சதவிகிதமாகக் குறைந்தது.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களால் மத்தியிலும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வந்த போதிலும், இந்திய சந்தைகள் மீள்தன்மையுடன் இருந்தன.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 14) அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,263.52 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

இதையும் படிக்க: முதல் 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.1.65 லட்சம் கோடியாக சரிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com