
ரியல்மீ நிறுவனத்தின் நர்ஸோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அதீத பேட்டரி திறனுடன் அறிமுகமாகவுள்ளது.
பட்ஜெட் விலையில் ரூ. 10 ஆயிரத்துக்குக் கீழ் நிறைவான அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு நர்ஸோ 80 லைட் சிறந்த தேர்வாக அமையும் எனக் கூறப்படுகிறது.
பிரீமியம் விலையில் உள்ள மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் கூடுதல் பேட்டரி திறன் (6000mAh) இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் விலையில் இருந்தாலும், சிறப்பம்சங்களில் பெரிதாக எவ்வித சமரசமும் செய்யப்படவில்லை.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
ரியல்மீ நர்ஸோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் பின்புறம் ஃபிளாஷ்லைட் உடன் கூடிய இரண்டு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
எல்இடி திரையானது பிரகாசமாக இருக்கும் வகையில் 625nits திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தும்போது திரை சுமூகமாக இருப்பதற்காக 120Hz திறன் வழங்கப்பட்டுள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 6,300 சிப்செட் புராசஸர் உடன் ஆன்டிராய்டு 15 கொடுக்கப்பட்டுள்ளது.
6000mAh பேட்டரி திறனுடன் 15W சார்ஜிங் திறன் வழங்கப்பட்டுள்ளது.
128GB நினைவகமும் 4GB உள் நினைவகமும் கொண்ட நர்ஸோ 80 லைட் 5ஜி விலை ரூ. 10,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவின்போது ரூ. 700 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுவே 6GB உள் நினைவகம் என்றால் ரூ. 11,499.
ஜூன் 20ஆம் தேதி முதல் அமேசான் இணைய விற்பனை தளத்தில் இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்து வாங்கலாம்.
இதையும் படிக்க | விவோ ஒய் 400 5ஜி இந்தியாவில் அறிமுகமாவது எப்போது? சிறப்புகள் என்னென்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.