வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ரிலையன்ஸ் உடன் ஓபன் ஏஐ, மெட்டா பேச்சுவார்த்தை!

ரிலையன்ஸ் உடன் சேர்ந்து செய்யறிவு தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்புகள் குறித்து பேச்சுவார்த்தை.

News image

செய்யறிவு..

Updated On :23 மார்ச் 2025, 1:04 pm IST

இந்தியாவில் செய்யறிவு தொழில்நுட்பத்தை (ஏஐ) மேம்படுத்துவதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஓபன் ஏஐ மற்றும் மெட்டா நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில், ரிலையன்ஸ் உடன் சேர்ந்து செய்யறிவு தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படுவதாகத் தெரிகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஓபன் ஏஐ நிறுவனம் சேட்ஜிபிடி என்ற செய்யறிவு தொழில்நுட்பத்தை கடந்த 2022ஆம் ஆண்டு உருவாக்கியது. இதன் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதேபோன்று மெட்டா நிறுவனமும் மெட்டா ஏஐ என்ற செய்யறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் தங்கள் செய்யறிவு தொழில்நுட்பப் பயன்பாட்டை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளன.

இந்தியா போன்ற மிகப்பெரிய மற்றும் அதிக இளைஞர்களைக் கொண்ட சந்தையில் செய்யறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகம் என்பதால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் அதனை விரிவுபடுத்த இந்த இரு நிறுவனங்களும் அம்பானியுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன.

மக்கள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் சேட்ஜிபிடி-க்கான சந்தா மானியத்தைக் குறைக்க தனது நிறுவன ஊழியர்களுடன் ஓபன் ஏஐ பேச்சுவார்த்தை நடத்தியது. தற்போது மாதத்திற்கு 20 டாலர்கள் (ரூ. 1,720) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ரிலையன்ஸ் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையில் சந்தாவுக்கான கட்டணத்தை குறைப்பது குறித்து பேசவில்லை எனத் தெரிகிறது. இதன்மூலம் ரிலையன்ஸ் உடன் சேர்ந்தால், கட்டண குறைப்பின்றி அதிக மக்களை சென்றடைய முடியும் என ஓபன் ஏஐ கருதுவதாகத் தெரிகிறது.

ஓபன் ஏஐ மாடல்களை ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பயன்பாட்டிற்காக விற்பனை செய்வது குறித்து முகேஷ் அன்பானியுடம் விவாதித்ததாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.