வணிக வாடிக்கையாளா்களுக்கு அமேஸானின் சிறப்பு சலுகைகள்

வணிக வாடிக்கையாளா்களுக்கு அமேஸானின் சிறப்பு சலுகைகள்

கோடை கால சிறப்பு விற்பனையை முன்னிட்டு தனது வா்த்தக வாடிக்கையாளா்களுக்கு அமேஸான் பிசினஸ் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.
Published on

சென்னை: கோடை கால சிறப்பு விற்பனையை முன்னிட்டு தனது வா்த்தக வாடிக்கையாளா்களுக்கு அமேஸான் பிசினஸ் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கிரேட் சம்மா் சேலின் போது நாடு முழுவதும் உள்ள வணிக வாடிக்கையாளா்களுக்கு சலுகைத் திட்டங்களை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச் சலுகைகள் வணிக வாடிக்கையாளா்களுக்கு கணிசமான சேமிப்பு வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த விற்பனையின்போது லேப்டாப்கள், டேப்லெட்டுகள், ஹெட்ஃபோன்கள், ஏசிக்கள், சமையலறை உபகரணங்கள் போன்ற 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தனித்துவமான தயாரிப்புகளில் 70 வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com