

இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் சுமார் 1.5 சதவிகிதம் வரை உயர்ந்தது. சென்செக்ஸ் 1,200.18 புள்ளிகள் உயர்ந்து 82,530.74 ஆகவும், நிஃப்டி-50 குறியீடு 394.20 புள்ளிகள் உயர்ந்து 25,062.10 ஆக முடிந்தன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா, அமெரிக்காவிற்கு பூஜ்ஜிய வரி வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியதாக கூறியதையடுத்து, இந்திய பங்குச் சந்தையானது ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது முடிந்தது.
டிரம்பின் கருத்துக்களுக்கு முன்பு வர்த்தகம் சீராக இருந்த நிலையில், நிஃப்டி-50 குறியீடு 1.75% உயர்ந்து 25,098 ஆகவும், சென்செக்ஸ் 1.67% உயர்ந்து 82,696.53 ஆகவும் இருந்தது.
டாடா மோட்டார்ஸ் 4% உயர்ந்து, நிஃப்டி ஆட்டோ குறியீட்டை சுமார் 2% உயர்த்தியது. அதே வேளையில் அதன் சொகுசு கார் பிராண்டான ஜாகுவார் லேண்ட் ரோவர் அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக டாடா மோட்டார்ஸை கருதுவதாக தெரியவந்துள்ளது.
அக்டோபர் 17, 2024க்குப் பிறகு, நிஃப்டி முதல் முறையாக 25,000 புள்ளிகளைத் கடந்து பயணித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
சென்செக்ஸ் இன்று 1.48 சதவிகிதம் உயர்ந்து 82,530.74 ஆகவும், நிஃப்டி 1.60 சதவிகிதம் உயர்ந்து 25,061.10 ஆகவும் முடிவடைந்த நிலையில், பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.6 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.9 சதவிகிதம் உயர்ந்தது.
ரியல் எஸ்டேட், எண்ணெய் & எரிவாயு, உலோகம், ஊடகம், ஐடி, ஆட்டோ, வங்கி ஆகிய குறியீடுகள் 1 முதல் 2 சதவிகிதம் வரை உயர்ந்து முடிவடைந்தன.
வர்த்தகத்தின் தொடக்கத்தில், கலவையான உலகளாவிய குறிப்புகளால் மந்தமான தொடக்கத்திலும், அதனை தொடர்ந்து அதிக ஏற்ற-இறக்கத்திற்கும் இது வழிவகுத்தது. மத்திய அமர்வில் நிஃப்டி எழுச்சி பெற்று 25,000 புள்ளிகளை கடந்து பயணித்தது.
சென்செக்ஸில் பவர் கிரிட், இண்டஸ்இண்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, சன் பார்மா, இன்போசிஸ், மஹிந்திரா & மஹிந்திரா, கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை சரிந்து வர்த்தகமான நிலையில் டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை உயர்ந்து முடிந்தன.
நிஃப்டி-யில் ஹீரோ மோட்டோகார்ப், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டிரென்ட், டாடா மோட்டார்ஸ் மற்றும் எச்சிஎல் டெக்னாலஜிஸ் உயர்ந்து முடிந்தன.
ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை சரிவுடன் வர்த்தகமானது.
புதன்கிழமை அமெரிக்க சந்தைகள் கலவையான குறிப்பில் முடிவடைந்தன.
அனுபம் ரசாயனன், காட்ஃப்ரே பிலிப்ஸ், ஸ்ரீ சிமென்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஏபிஎல் அப்பல்லோ, பாரத் எலக்ட்ரானிக்ஸ், டால்மியா பாரத், மேக்ஸ் ஃபைனான்சியல், ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர், சோலார் இண்டஸ்ட்ரீஸ், ஜேகே சிமென்ட் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட பங்குகள் இன்றைய மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தை பதிவு செய்தது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 2.10 சதவிகிதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 64.70 அமெரிக்க டாலராக உள்ளது.
இதையும் படிக்க: ஏப்ரலில் குறைந்த மொத்த விலை பணவீக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.