கூகுள் நிறுவனத்தின் பணியில் இருந்து டிவிட்டருக்கு (எக்ஸ்) மாற முயன்றவரை ரூ. 853 கோடி கொடுத்து (100 மில்லியன் டாலர்) வேலையில் தக்கவைத்துள்ளது கூகுள் நிறுவனம்.
இவ்வளவு தொகையைக் கொடுத்து வேலையில் தக்க வைத்தது வேறு யாரையும் அல்ல, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் என்பவரைத்தான்.
கூகுள் நிறுவனத்தின் விளம்பரங்களுக்கும் யூடியூப் விடியோ தயாரிப்பு வியூகங்களுக்கும் முக்கிய காரணியாக இவர் செயல்பட்டார்.
2011 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இருந்து டிவிட்டர் (இப்போது எக்ஸ்) நிறுவனத்துக்கு மாற இவர் திட்டமிட்டுள்ளார். இதனால், ரூ. 853 கோடி கொடுத்து வேலையில் இவரைத் தக்கவைத்துள்ளது கூகுள். அதுவும் 15 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு பெரியத் தொகையைக் கொடுத்துள்ளது. தற்போது இதன் மதிப்பு மிகவும் அதிகம்.
ஸெரோதா நிறுவனத்தின் துணை நிறுவனர் நிகில் காம்நாத் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் யூடியூப் தலைமைச் செயல் அதிகாரி நீல் மோகன் குறித்துப் பேசியபோது இந்த சுவாரசியம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
2011 ஆம் ஆண்டு ’டெக் கிரஞ்ச்’ செய்தி நிறுவனத்தின் தரவுகள்படி, நீல் மோகனைத் தக்கவைக்க கூகுள் வழங்கிய சலுகைத்தொகையானது, நிலையான பங்குகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
நீல் மோகன் யார்?
இவர் அமெரிக்க வாழ் இந்தியர். கலிஃபோர்னியாவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் மின்பொறியியல் படிப்பை முடித்து, அக்செஞ்செர் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த நீல் மோகன், பின்னர், நெட்கிராவிட்டி நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.
சிறிது நாள்களுக்குப் பிறகு டபுள்கிளிக் என்ற நிறுவனத்தில் சேர்ந்து அந்நிறுவன வணிக நடவடிக்கைகளின் துணைத் தலைவரானார்.
2007ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் டபுள்கிளிக் நிறுவனத்தை 3.1 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இவ்வாறு கூகுள் நிறுவனத்துக்கு பணிபுரிந்துவந்த நீல் மோகன், அந்நிறுவனத்துக்கான வணிக விளம்பரங்களைக் கவனித்துவந்தார்.
இதையும் படிக்க | இந்தியர்கள் பிலிப்பின்ஸ் செல்ல விசா தேவையில்லை: முழு விவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐஷர் மோட்டார்ஸ் முதல் காலாண்டு லாபம் 21.4% உயர்வு!

ரூ. 52,000 கோடி இழப்பீடு! ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு! எதற்காக?

இந்தியாவின் மதிப்புமிக்க பட்டியலிடப்படாத நிறுவனம் என்எஸ்இ
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!
விடியோக்கள்

தவெக இதைச் செய்ய வேண்டும்: மு. வீரபாண்டியன் வலியுறுத்தல்! | CPI | TVK |



