மும்பை: இரண்டு நாட்கள் சரிவுக்குப் பிறகு, இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உயர்ந்து வர்த்தகமானது.
ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சியை பிரதிபலிக்கும் வகையில் உள்ளூர் சந்தை உயர்ந்து முடிந்தன. இதனிடையில் அந்நிய நிதி வரத்தும் பங்குச் சந்தைகளை மீட்க உதவியது.
30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு ஆரம்ப வர்த்தகத்தில் 504.57 புள்ளிகள் உயர்ந்து 81,816.89 ஆக இருந்தது. அதே வேளை நிஃப்டி 137.25 புள்ளிகள் உயர்ந்து 24,889.70 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 320.70 புள்ளிகள் உயர்ந்து 81,633.02 புள்ளிகளாகவும், நிஃப்டி 81.15 புள்ளிகள் உயர்ந்து 24,833.60 புள்ளிகளில் நிலைபெற்றது.
சென்செக்ஸில் இன்ஃபோசிஸ், டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, எச்.சி.எல் டெக், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், சன் பார்மா, டாடா மோட்டார்ஸ் மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்த நிலையில் அல்ட்ராடெக் சிமென்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் நெஸ்லே ஆகியவை சரிந்து முடிந்தன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இறக்குமதிகள் மீதான பரஸ்பர வரிகளை உயர்த்துவதைத் தடுக்கும் அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தின் தீர்ப்பை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
அவசரகால அதிகாரங்களின் கீழ் பெரும் வரிகளை விதிக்கும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வெளிநாட்டு வர்த்தகத்தை காங்கிரஸ் மட்டுமே ஒழுங்குபடுத்த முடியும் என்று சர்வதேச வர்த்தக நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயரந்த நிலையில் ,நேற்று (புதன்கிழமை) அமெரிக்க சந்தைகள் சரிவுடன் முடிந்தன.
அந்நிய மதலீட்டாளர்கள் நேற்று ரூ.4,662.92 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.11 சதவிகிதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 65.62 அமெரிக்க டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!!
23,400 புள்ளிகளை எட்டிய நிஃப்டி, சென்செக்ஸ் 304 புள்ளிகள் சரிவு; ஐடி துறை பங்குகள் தொடர் பின்னடைவு!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



