புது தில்லி: அரசு பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் - (செயில்), மார்ச் உடன் உள்ள காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 11 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரித்து ரூ.1,250.98 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2023-24 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையான காலகட்டத்தில் நிறுவனம் ரூ.1,125.68 கோடி நிகர லாபத்தை ஈட்டியிருந்ததாக தெரிவித்தது.
நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைக்கும் வருவாயை 2025 நிதியாண்டின் 4-வது காலாண்டில் ரூ.29,316.14 கோடியாக உயர்த்துள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் இது ரூ.27,958.52 கோடியாக இருந்தது.
மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டு செலவுகள் ரூ.28,020.56 கோடியாக இருந்தத நிலையில், 2024ஆம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் அது ரூ.26,473.86 கோடியாக இருந்தது.
காலாண்டுக்கு காலாண்டு அடிப்படையில், நிகர லாபம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய ரூ.141.89 கோடி நிகர லாபத்துடன் ஒப்பிடும்போது இது சுமார் 9 மடங்கு அதிகமாகும்.
2025 நிதியாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,371.80 கோடியாகக் குறைந்துள்ளது, இதுவே 2024ஆம் நிதியாண்டில் அது ரூ.3,066.67 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, நிதியாண்டில் ரூ.10 பங்குக்கு ரூ.1.60 இறுதி ஈவுத்தொகையை பரிந்துரைத்துள்ளது.
இதையும் படிக்க: பாட்டா இந்தியாவின் 4-வது காலாண்டு லாபம் 36% சரிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிசிஎம் ஸ்ரீராம் முதல் காலாண்டு லாபம் ரூ. 692 ஆக அதிகரிப்பு!

ஜேகே பேப்பர் முதல் காலாண்டு நிகர லாபம் 63% உயர்வு!

டிரான்ஸ்ஃபார்மர்ஸ் & ரெக்டிஃபையர்ஸ் காலாண்டு லாபம் சரிவு!

ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் காலாண்டு லாபம் இரட்டிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



