ஓப்போ ஃபைன்ட் எக்ஸ் 9 ஸ்மார்ட்போன் (OPPO Find X9) இந்தியாவில் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஓப்போவில் இதுவரை இல்லாத வகையில் வெல்வெட் சிவப்பு நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓப்போ நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் தற்போது ஃபைன்ட் எக்ஸ் 9 அறிமுகமாகவுள்ளது.
ஸ்மார்ட்போன் அறிமுகமாவதற்கு 10 நாள்களுக்கு முன்பு, இந்த ஸ்மார்ட்போனை வெல்வெட் சிவப்பு நிறத்தில் தயாரித்து இந்தியாவில் வெளியிட ஓப்போ முடிவு செய்தது.
வெல்வெட் சிவப்பு நிறத்தைத் தவிர, வெல்வெட் கருப்பு, விண்வெளி கருமை, டைட்டானியம் சாம்பல் நிறங்களிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஃபைன்ட் எக்ஸ் 9 சிறப்பம்சங்கள்
ஓப்போ ஃபைன்ட் எக்ஸ் 9 ஸ்மார்ட்போன் 7025mAh பேட்டரி திறன் கொண்டது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 80W சார்ஜிங் திறம் கொடுக்கப்பட்டுள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 7500 புராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது.
கலர் ஓஎஸ் ஆன்டிராய்டு உடையது.
கேமராக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், 200MP டெலிபோட்டோ சென்சார் கொண்டது.
ஃபைன்ட் எக்ஸ் 9 வரிசை ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் கிடைத்தாலும், வெல்வெட் சிவப்பு நிறமுடைய ஸ்மார்ட்போன் டிச. 8ஆம் தேதி முதல் இந்திய சந்தைகளில் கிடைக்கும்.
இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 74,999.
வங்கிச் சலுகைகள் மூலம் ரூ. 67,499-க்கு வாங்கலாம்.
இதையும் படிக்க | தங்கம் விலை மீண்டும் ரூ.95 ஆயிரத்தைக் கடந்தது!
Summary
OPPO Find X9 Gets a New Velvet Red Colour
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

8,000 mAh பேட்டரியுடன் வெளியாகும் ரியல்மி நார்ஸோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்!

7000 mAh பேட்டரி! ஓப்போ ரெனோ 16, ரெனோ 16 சி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ரயில்வே சுரங்கப் பாதை வழியாக செல்லும் வாகனங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சாலைகளையும், மால்களையும்கூட மூட வேண்டும்! டெலிகிராம் கிண்டல்
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



