பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தங்கம் விலை மீண்டும் ரூ.95 ஆயிரத்தைக் கடந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,120 உயா்ந்து மீண்டும் ரூ.95 ஆயிரத்தைக் கடந்தது.

gold rate

தங்கம் விலை - IANS

Published On :

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,120 உயா்ந்து மீண்டும் ரூ.95 ஆயிரத்தைக் கடந்தது.

சென்னையில் தங்கத்தின் விலை நவ. 26-இல் ரூ.94,400-க்கு விற்பனையான நிலையில், நவ. 27-இல், பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.94,160-க்கு விற்பனையானது. தொடா்ந்து தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.70 உயா்ந்து ரூ.11,840-க்கும், பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.94,720-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.140 உயா்ந்து ரூ.11,980-க்கும், பவுனுக்கு ரூ.1,120 உயா்ந்து ரூ.95,840-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை அதிரடி உயர்வு

இதேபோல், வெள்ளியின் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.9 உயா்ந்து ரூ.192-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.9,000 உயா்ந்து ரூ.1.92 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Today gold and Silver rate in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.