லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

யமஹாவுக்குப் போட்டியாக டிவிஎஸ்ஸில் புதிய ரேசர் பைக்!

யமாஹா ரேசர் பைக்குகளுக்கு இணையாக டிவிஎஸ் நிறுவனமும் கஃபே ரேசர் பைக்குகளை தயாரிக்கவுள்ளது குறித்து...

TVS Ronin cafe racer bike

டிவிஎஸ் கஃபே ரேசர் பைக் வடிவம் - முகநூல் / TVS Ronin

Published On :2 ஏப்ரல் 2026, 6:11 pm IST

யமாஹா நிறுவனத்தின் ரேசர் பைக்குகளுக்கு இணையாக டிவிஎஸ் நிறுவனமும் கஃபே ரேசர் பைக்குகளை தயாரிக்கும் திட்டத்தில் உள்ளது.

இந்த புதிய பைக்கில் டிவிஎஸ்ஸின் தற்போதைய ரோனின் மாடலை விட முற்றிலும் மாறுபட்ட அதே வேளையில் இளைஞர்களைக் கவரும் வகையிலான வடிவமைப்பைக் கொடுண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

ரோனின் பைக்கில் உள்ளதைப்போன்று, 225சிசி, ஆயில்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஏனெனில் ரோனின் மாடல் பைக்கில் இந்த என்ஜின் சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறது.

சுமார் 20.4 hp சக்தியும் 19.9 Nm டார்க் திறனும் கொண்டதாக இருக்கும். 5 வகையான ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வரும் இந்த அமைப்பு, அதிகபட்ச செயல்திறன் மேம்பாட்டை விட சவாரி பாணி மற்றும் வடிவமைப்பு மேல் கவனம் செலுத்தும் வகையில் இருக்கும் எனத் தெரிகிறது.

சிறிய ஹெட்லைட் ஃபேரிங், பின்புற இருக்கை இல்லாமல் ஒற்றை இருக்கை கொண்ட வடிவமைப்பு, முன்புறம் சாய்ந்த ஓட்டுநர் நிலை, கிளிப்-ஆன் ஹேண்டில் போன்றவை இதன் சிறப்புகளாகக் கருதப்படுகின்றன.

கஃபே ரேசர் பைக் வடிவத்தில் புதிய மாடலை தயாரிப்பதற்கான காப்புரிமையை டிவிஎஸ் நிறுவனம் பெற்றுள்ளது. எனினும் இது குறித்து டிவிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. காப்புரிமை பெற்ற அனைத்தையும் தயாரிக்க வேண்டிய கட்டாயமில்லை; அதே வேளையில் அவை எதிர்காலத்தில் உருவாக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

New Racer Bike from TVS to Compete with Yamaha

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.