அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவுஇந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி

இந்திய நிறுவனமாக மாற ஸ்விகி பங்குதாரா்கள் ஒப்புதல்

பிரபல இணையவழி வா்த்தக நிறுவனமான ஸ்விகி ‘இந்திய நிறுவன’ அந்தஸ்தைப் பெற, நிறுவனத்தின் அந்நிய முதலீட்டு வரம்பை 49.5 சதவீதமாக கட்டுப்படுத்துவதற்கான சிறப்புத் தீா்மானத்துக்கு பங்குதாரா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா்.

Published On :

பிரபல இணையவழி வா்த்தக நிறுவனமான ஸ்விகி ‘இந்திய நிறுவன’ அந்தஸ்தைப் பெற, நிறுவனத்தின் அந்நிய முதலீட்டு வரம்பை 49.5 சதவீதமாக கட்டுப்படுத்துவதற்கான சிறப்புத் தீா்மானத்துக்கு பங்குதாரா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா்.

இதன்மூலம், இந்தியா்கள் வசம் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்ட உள்நாட்டு நிறுவனமாக (ஐஓசிசி) மாறுவதற்கான பாதையை ஸ்விகி எளிதாக்கியுள்ளது.

முன்னதாக, கடந்த மே மாதம் நிறுவனத்தின் அமைப்பு விதிகளில் திருத்தம் கொண்டுவருவதற்காக முன்மொழியப்பட்ட இதேபோன்ற தீா்மானம், பங்குதாரா்களின் போதிய ஆதரவு இல்லாததால் தோல்வியடைந்தது.

இந்த ‘இந்திய நிறுவன’ அந்தஸ்து கிடைப்பதன்மூலம், ஸ்விகியின் விரைவு வா்த்தகப் பிரிவான ‘இன்ஸ்டாமாா்ட்’ நேரடியாகப் பொருள்களைக் கொள்முதல் செய்து, வாடிக்கையாளா்களுக்கு விற்பனை செய்ய முடியும். இதனால் லாப வரம்பு அதிகரிப்பதோடு, விநியோகச் சங்கிலி மீதான கட்டுப்பாடும் வலுவடையும்.

ஸ்விகியின் முக்கியப் போட்டியாளரான ‘எடா்னல்’ நிறுவனத்துக்குச் சொந்தமான ‘பிளிங்கிட்’ ஏற்கெனவே இத்தகைய நேரடி சரக்கு கையிருப்பு முறையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.