கோப்புப் படம்
கோப்புப் படம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.90.21ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.90.21ஆக நிறைவு.
Published on

மும்பை: அதிகரித்த கச்சா எண்ணெய் விலை, டாலரின் வலுவான நிலை மற்றும் அந்நிய நிதி தொடர்ந்து வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால், இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.90.21ஆக நிறைவு.

உலக அரசியல் பதற்றங்கள் மற்றும் பலவீனமான பங்குச் சந்தைகளும் இந்திய ரூபாயின் மீதான அழுத்தத்தை ஏற்படுத்தியதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.90.24 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, ஒரு கட்டத்தில் ரூ.90.30 என்ற நாளின் குறைந்தபட்ச நிலையை தொட்டது. முடிவில் அதன் முந்தைய நாள் முடிவடைந்த விலையிலிருந்து 4 காசுகள் சரிந்து ரூ.90.21ஆக நிலைபெற்றது.

நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.90.17 ஆக நிறைவு.

Summary

The rupee declined 4 paise to close at 90.21 against the US dollar on Tuesday.

கோப்புப் படம்
சென்செக்ஸ் 250 புள்ளிகளுடனும், நிஃப்டி 58 புள்ளிகளுடன் சரிந்து நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com