

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு மாதத்தில் 2வது முறையாக ரூ.91 என்ற வரம்பை கடந்து, இறுதியில் 14 காசுகள் சரிந்து ரூ.90.92ஆக நிலைபெற்றது.
கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் பலவீனமான டாலர் உள்ளிட்டவை இருந்தபோதிலும், உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட விற்பனையின் அழுத்தம் இந்திய நாணயத்தை கீழ்நோக்கித் தள்ளியதாக அந்நியச் செலாவணி வர்த்தர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.90.68 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, டாலருக்கு நிகராக ரூ.91.01 என்ற வரம்பை கடந்து சரிந்தது. வர்த்தக முடிவில், 14 காசுகள் சரிந்து ரூ.90.92 என்ற அளவில் நிலைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.