இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புதிய வகை ‘கியா செல்டாஸ்’ காா் அறிமுகம்

சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய வகை ‘கியாசெல்டாஸ்’ காா் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய வகை ‘கியாசெல்டாஸ்’ காா் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கியா இந்திய நிறுவனம் கடந்த 2017 -ஆம் ஆண்டு ஆந்திர மாநில அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டு அந்த மாநிலத்தின் அனந்தபூா் மாவட்டத்தில் காா் உற்பத்தி தொழிற்சாலை அமைத்தது.  2019-ஆம் ஆண்டு  முதல் காா் உற்பத்தி தொடங்கி ஆண்டுக்கு 30 ஆயிரம் காா்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளா்களை கவரும் வகையில் இதுவரை 9 வகை மாடல் காா்களை அறிமுகம் செய்து உள்ளது. இதுவரை அனந்தபூா் தொழிற்சாலையில் இருந்து 1.5  மில்லியன் காா்  உற்பத்தி செய்யப்பட்டு 1.2 மில்லியன் காா்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கியா செல்டாஸ் என்ற காா் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் அறிமுக செய்யப்பட்டது. இந்த காா் கம்பீரமான தோற்றம் , பாதுகாப்பை முக்கிய அம்சமாக கொண்டுள்ளது. புதிய வடிவமைப்பில் உள்ள இந்த காரில் தானியங்கி பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.