ரெட்மி நோட் 17, ரெட்மி நோட் 17 புரோ மொபைல்கள் சீனாவில் அறிமுகம் செயப்பட்டுள்ளன. அதிலுள்ள சிறப்பம்சங்கள், இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் தனி வர்த்தகத்தைக் கொண்டுள்ள ரெட்மி நிறுவனம், மொபைல்கள், டேப்கள், ஏர்பாட்களை தொடர்ச்சியாக தயாரித்து வருகிறது.
இந்த ரெட்மி நிறுவனத்தின் நோட் சீரிஸ் மாடல் மொபைல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. குறைந்த விலையில், அதிக பேட்டரி, கேமராவிற்காக அதிகளவில் விற்பனையாகின்றன.
இந்த நிலையில், பலரும் எதிர்பார்த்த யாரும் எதிர்பார்த்திடாத வகையில், ரெட்மி 16 மொபைலை அறிமுகம் செய்யாமலேயே, ரெட்மி நோட் 17, ரெட்மி நோட் 17 புரோ மொபைல்கள் சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரெட்மி நோட் 17 5ஜி, குவால்காம் சிப்செட் மற்றும் மேம்படுத்தப்பட்ட டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 17 ப்ரோ, 3 நாள்கள் வரை நீடிக்கப் போதுமான ஒரு பெரிய 9,000mAh பேட்டரியைப் பெற்றுள்ளது. 67W வயர்டு சார்ஜிங் வசதியுடன், வெறும் 85 நிமிடங்களில் 0 முதல் 100 சதவிகிதம் வரை வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் இதன் விற்பனை எப்போது என்ற அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இன்னும் ஓரிரு வாரங்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி நோட் 17 5ஜியின் விலை
6ஜிபி+ 128ஜிபி – 1299 யுவான் (ரூ. 18,500)
8ஜிபி+ 128ஜிபி – 1399 யுவான் (ரூ. 20,000)
8ஜிபி+ 256ஜிபி – 1599 யுவான் (ரூ. 23,000)
ரெட்மி நோட் 17 புரோ 5ஜியின் விலை
8ஜிபி+ 128ஜிபி – 1599 யுவான் (ரூ. 23,000)
8ஜிபி+ 256ஜிபி – 1699 யுவான் (ரூ. 24,500)
12ஜிபி+ 256ஜிபி – 1999 யுவான் (ரூ. 28,500)
8 ஜிபி + 512 ஜிபி – 2099 யுவான் (ரூ. 30,000)
Summary
the Redmi Note 17 5G series, including the Standard Note 17 5G and Note 17 Pro 5G, officially launched in China. Redmi Note 17 offers solid specifications, including a display and a powerful Qualcomm chipset.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








