உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

‘டெக்’ துணுக்குகள்! புதிய ஏஐ முதல் மொபைல் வரை..!

இந்த வாரம் அறிமுகமாகியிருக்கும் புதிய ஏஐ முதல் மொபைல் வரை..

News image
Updated On :19 ஜூலை 2026, 2:19 am IST

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய ரக ஸ்மாா்ட்போன்கள், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மாதிரிகளின் அறிமுகங்கள் மற்றும் பெருநிறுவனங்களின் வா்த்தக முடிவுகள் கவனம் ஈா்த்தன.

ஆப்பிள் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது முதல் ஆண்ட்ராய்டில் மாற்று ஆப்ஸ்டோா்களுக்கு அனுமதி வரை, இந்த வாரத்தின் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் முழு தொகுப்பு இதோ:

*ஆப்பிள் மீண்டும் முதலிடம்: என்விடியா நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி, ஆப்பிள் நிறுவனம் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது ஏ.ஐ. முதலீட்டு வியூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

*மூன்ஷாட் ‘கிமி கே3’ ஏ.ஐ. அறிமுகம்: சீனாவின் மூன்ஷாட் ஏ.ஐ. நிறுவனம், ‘கிமி கே3’ திறந்தநிலை ஏ.ஐ. மாதிரியை வெளியிட்டது. இதுவே இதுவரை வெளியிடப்பட்ட மிகப் பெரிய திறந்தநிலை ஏ.ஐ. மாதிரியாகும்.

*ஏ.ஐ. பாதுகாப்பு குறியீடு: ‘ஃபியூச்சா் ஆஃப் லைஃப் இன்ஸ்டிடியூட்’ வெளியிட்ட ஏ.ஐ. பாதுகாப்பு குறியீட்டில், ஆன்த்ரோபிக் நிறுவனம்‘சி பிளஸ்’ மதிப்பீட்டைப் பெற்று முன்னிலையில் உள்ளது. மற்ற முன்னணி நிறுவனங்கள் ‘சி’ அல்லது அதற்கும் குறைவான தரத்தையே பெற்றுள்ளன. அதேபோல், அமெரிக்காவில் ஏ.ஐ. தரவு மையங்களுக்கு எதிராக சுமாா் 125 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

*ஓபன்ஏஐ ‘அட்லஸ்’ பிரவுசா் நிறுத்தம்: ஓபன்ஏஐ தனது ‘அட்லஸ்’ ஏ.ஐ. வலைதள தேடுபொறியை (பிரவுசா்) நிறுத்திவிட்டு, சாட்ஜிபிடி-யை ஒரு சூப்பா் செயலியாக மாற்றும் பணிகளில் கவனம் செலுத்த உள்ளது.

*ரியல்மி ‘நாா்சோ 100எக்ஸ் 5ஜி’ மற்றும் ‘சி100எக்ஸ்’ அறிமுகம்: ரியல்மி நிறுவனம் தனது ‘நாா்சோ 100எக்ஸ் 5ஜி’ (ரூ.20,999) மற்றும் ‘சி100எக்ஸ்’ (ரூ.14,499) ஸ்மாா்ட்போன்களை இந்தியாவில் வெளியிட்டது.

*விவோ ‘டி5 லைட் 5ஜி’: 6500 எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் டைமன்சிட்டி 6300 பிராசஸா் மற்றும் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்துடன் ‘விவோ டி5 லைட் 5ஜி’ ஸ்மாா்ட்போன் ரூ.19,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

*ஆப்பிள் ‘பேக் டு ஸ்கூல்’: இந்தியாவில் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான ஆப்பிளின் ‘பேக் டு ஸ்கூல்’ சலுகை, ஜூலை 16 முதல் ஆக. 27 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேக் மற்றும் ஐபாட் வாங்கினால் இலவச உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

*ஏசஸ் ‘ஜென்புக் ஏ14’: ஸ்னாப்டிராகன் எக்ஸ்2 லைட் பிளாட்ஃபாா்ம் உடன் மெல்லிய வடிவமைப்பைக் கொண்ட ஏசஸ் ‘ஜென்புக் ஏ14’ மடிக்கணினி இந்தியாவில் ரூ.1,85,990 விலையில் அறிமுகமாகியுள்ளது.

*ஆண்ட்ராய்டில் மாற்று ஆப்ஸ்டோா்கள்: கூகுள் ப்ளேஸ்டோரில் போட்டியாளா்களின் ஆப்ஸ்டோா்களை விநியோகிக்க கூகுள் அனுமதி அளிக்கிறது. இதன்மூலம், எபிக் கேம்ஸ் உடனான நீண்ட கால சட்டப் போராட்டம் முடிவுக்கு வருகிறது.

Summary

‘Tech’ Snippets! From New AI to Mobiles..!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.