மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 94.93! 81 காசுகள் உயர்வு!

இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 81 காசுகள் உயர்ந்து ரூ. 94.93 ஆக நிலைபெற்றது.

Shashank Parade

Published On :

மும்பை: ரிசர்வ் வங்கி, அந்நிய மூலதனத்தை ஊக்குவிக்கும் வகையில், பல நடவடிக்கைகளை அறிவித்ததைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 81 காசுகள் உயர்ந்து ரூ. 94.93 ஆக நிலைபெற்றது.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை, எதிர்கொள்ள ரிசர்வ் வங்கி உறுதியளித்ததைத் தொடர்ந்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெகுவாக அதிகரித்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

மேற்கு ஆசிய நெருக்கடியால் ஏற்பட்டுள்ள எரிசக்தி விலை உயர்வு மற்றும் அதன் விநியோகத் தடைகளின் தாக்கத்தை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி, இன்று எதிர்பார்த்தபடியே தொடர்ந்து இரண்டாவது முறையாக வட்டி விகிதங்களை மாற்றமின்றி வைத்திருந்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.72 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகான வர்த்தகத்தின் போது, அதிகபட்சமாக ரூ. 94.89 என்ற அளவை எட்டியது. வர்த்தகத்தின் இறுதியில், முந்தைய நாள் முடிவிலிருந்து 81 காசுகள் உயர்ந்து ரூ. 94.93 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.

நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 95.74 ஆக நிலைபெற்றிருந்தது.

Summary

The rupee appreciated 81 paise to close at 94.93 against the US dollar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.