மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

என்எல்சி நிறுவனத்தின் 3% பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசு!

பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனத்தின் 3 சதவிகித பங்குகளை ஆஃபர் பார் சேல்ஸ் முறையில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

News image

NLC India

Updated On :8 ஜூன் 2026, 10:39 pm IST

புதுதில்லி: பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனத்தின் 3 சதவிகித பங்குகளை ஆஃபர் பார் சேல்ஸ் முறையில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பங்கிற்கு ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையான ரூ. 303 நிர்ணயித்து, ஆஃபர் பார் சேல்ஸ் முறையில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 2 சதவீத பங்குகளை அடிப்படை விற்பனையாகவும், கூடுதல் தேவை இருக்கும் பட்சத்தில் மேலும் 1 சதவீதப் பங்குகளை 'கிரீன் ஷூ ஆப்ஷன்' மூலமாகவும் விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக, முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையின் செயலாளர் அருனிஷ் சாவ்லா தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

சில்லறை முதலீட்டாளர்கள் அல்லாதவர்களுக்கான இந்த விற்பனை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கும் என்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கான விற்பனையானது ஜூன் 10ஆம் தேதி தொடங்கும் என்றது.

நடப்பு நிதியாண்டில் இதுவரை, பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் மத்திய அரசு ரூ. 12,166 கோடியைத் திரட்டியுள்ளது. அதே வேளையில், பங்கு விற்பனை மூலம் கோல் இந்தியா-விலிருந்து ரூ. 5,542 கோடியும், என்எச்பிசி-யிலிருந்து ரூ. 4,357 கோடியும் மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா-யிலிருந்து ரூ. 2,266 கோடி திரட்ட உள்ளது.

Summary

The Government will sell up to three per cent stake in NLC India Limited .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.