கார்களில் முன்னனி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பல்வேறு மாற்றங்களுடன் விதவிதமான மாடல்களையும், எடிசன்களை அறிமுகம் செய்து வருகின்றது. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான புதிய மாடலாக டாடாவின் புதிய டியாகே ஹேட்ச்பேக்கை களமிறக்கியுள்ளது.
சிறப்பம்சங்கள் என்ன?
10.25 அங்குல தொடுதிரை, முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜிங், கரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அம்சமாக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, இஎஸ்சி மற்றும் ஏபிஎஸ் போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என்ஜின் தேர்வுகளுடன் கிடைக்கும் இந்த கார் 5 ஸ்பீடு மேனுவன் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களையும் பெறுகிறது.
இதன் ஆரம்ப ஷோரூம் விலை - ரூ. 4.69 லட்சமாக நிர்ணயித்துள்ளது.
டியாகோ இவி..
புதிய டியாகோ இவி ரூ. 6.99 லட்சம் முதல் ரூ. 9.99 லட்சம் வரையிலான விலையில் அறிமுகமாகியுள்ளது. 19.2 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடல் 226 கி.மீ. வரையிலும், 24 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடல் 285 கி.மீ வரையிலும் பயணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் டாப் வேரியண்ட்டில் எல்இடி ஹெல்லேம்புகள், 10.25 அங்குல தொடுதிரை, குரூஸ் கண்ட்ரோல், பவர் டெயில்கேட், மழையை உணர்ந்து செயல்படும் வைபர்கள் உள்ளிட்ட பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Tata Motors Launches Next Gen Tiago & Tiago.ev From ₹4.69 Lakh
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










