திடீரென அரோகரா என தமிழில் பதிவு! இன்று படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி! பின்னணி என்ன?தீபத்தூண் பகுதியில் இன்று யாருக்கும் அனுமதி இல்லை; நாளை வாருங்கள்! சிஆர்பிஎஃப் அதிகாரி வேண்டுகோள்பெரியார் அறிவுலக வழக்கு: அகல் விளக்கு உரிமையாளரை விசாரிக்க 3 நாள் போலீஸ் காவல்!தொகுதி மறுவரையறை மசோதா: கோரிக்கைகளை ஏற்றதால் திமுக ஆதரவு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்! கொப்பரை வைத்து ஏற்ற திட்டம்!அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு!நிதியின்றி தவிக்கும் போக்குவரத்துக் கழகம்! டயர்கள் இல்லாததால் முடங்கிய பேருந்துகள்: அன்புமணி குற்றச்சாட்டுமகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!திருப்பரங்குன்றம்: பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் வருகை!தவெக ஆட்சியில் மூலதனச் செலவினம் 11% சரிவு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

வீழ்ந்துகொண்டே செல்லும் ரூபாய் மதிப்பு! 1 டாலர் - ரூ. 94.82! 86 காசுகள் சரிந்தது!

இன்றைய வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு 86 காசுகள் சரிந்து ரூ. 94.82 என்ற மற்றொரு புதிய வரலாற்றுச் சரிவில் வர்த்தகம் நிறைவு.

கோப்புப் படம்

Updated On :

மும்பை: மேற்கு ஆசிய மோதல் குறித்த நிச்சயமற்ற சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வலுவடைந்து வரும் டாலர் உள்ளிட்டவையால், இன்றைய வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 86 காசுகள் சரிந்து, டாலருக்கு நிகரான ரூ. 94.82 என்ற மற்றொரு புதிய வரலாற்றுச் சரிவில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

உள்நாட்டுப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவு மற்றும் அந்நிய நிறுவன முதலீடுகளின் தொடர் வெளியேற்றம் ஆகியவை, இந்திய ரூபாயின் மீதான அழுத்தத்தை ஏற்படுத்தியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 94.18 என்ற நிலையில் தொடங்கி பிறகு, முதல் முறையாக ரூ. 94.50 என்ற எல்லையை கடந்து, ரூபாய் மதிப்பு இறுதியில் டாலருக்கு நிகரான ரூ. 94.82 என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இது முந்தைய நாள் நிறைவு விலையிலிருந்து 86 காசுகள் குறைவாகும்.

முன்னதாக, நேற்று (புதன்கிழமை) இந்திய ரூபாய் மதிப்பு 20 காசுகள் சரிந்து, டாலருக்கு நிகராக ரூ. 93.96 என்ற புதிய வரலாற்றுச் சரிவில் இருந்தது.

Summary

The rupee tanked 86 paise to close at yet another all-time low of 94.82 against the US dollar on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.