இந்தியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஃபைனான்ஸ் தனது 4வது காலாண்டு வருவாய் குறித்து அறிவித்தது.
மார்ச் 2026 உடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் முழு நிதியாண்டிற்கான நிதி முடிவுகளை நிறுவனம் வெளியிட்டதைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை அன்று நிஃப்டி-யில் பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் 4.27% வரை உயர்ந்து, பங்கு ஒன்றுக்கு ரூ. 969.80 என்ற நிலையில் வர்த்தகமானது.
மார்ச் 2026 உடன் முடிவடைந்த மூன்று மாதங்களுக்கான நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் 22% வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ. 5,553 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், நிறுவனம் ரூ. 4,546 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்தது. மதிப்பாய்வுக்குட்பட்ட காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 11,755 கோடியிலிருந்து 21% அதிகரித்து ரூ. 14,209 கோடியாக உயர்ந்தது.
2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், நிகர வட்டி வருமானம் கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இருந்த ரூ. 9,808 கோடியிலிருந்து 20% வளர்ந்து ரூ. 11,781 கோடியாக உள்ளது.
மார்ச் 2026 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான, தலா ரூ. 1 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்குக்கும் ரூ. 6 வீதம் இறுதி ஈவுத்தொகையை வழங்க வாரியம் பரிந்துரைத்தது.
Summary
Bajaj Finance share price: Shares of Bajaj Finance rallied as much as 4.27% to ₹969.80 apiece on the NSE .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐடிசி ஹோட்டல் 4வது காலாண்டு லாபம் 23% உயர்வு!

டாடா ஸ்டீல் 4வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

பாரதி ஏர்டெல் 4வது காலாண்டு நிகர லாபம் 7,325 கோடியாக சரிவு!

பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் 4வது காலாண்டு லாபம் ரூ. 8,598 கோடியாக உயர்வு!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!




