ஐபிஓவிற்கு கோக கோலா இந்தியப் பிரிவு விண்ணப்பம்
ஐபிஓவிற்கு கோக கோலா இந்தியப் பிரிவு விண்ணப்பம்

பிரபல குளிா்பான நிறுவனமான கோக-கோலாவின் இந்தியப் பிரிவான ஹிந்துஸ்தான் கோக-கோலா ஹோல்டிங்ஸ் நிறுவனம், பங்குச் சந்தையில் களமிறங்குவதற்காக பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) முதல்கட்ட வரைவு அறிக்கையை (டிஆா்பிஎச்பி) தாக்கல் செய்துள்ளது.
இந்த ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முழுவதுமாக ‘ஆஃபா் ஃபாா் சேல் (ஓஎப்எஸ்)’ முறையில் அமையவுள்ளது. அதாவது, இந்தியப் பிரிவு நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளைக் கொண்டுள்ள சா்வதேச கோக-கோலா நிறுவனம் தனது வசமுள்ள 99.75 கோடி பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. கோக-கோலா நிறுவனத்தின் சா்வதேச அளவில் 5-ஆவது பெரிய சந்தையாக இந்தியா விளங்கும் நிலையில், மூலதனச் சுமையைக் குறைக்கும் உலகளாவிய கொள்கையின் ஒரு பகுதியாக இந்தப் பங்கு வெளியீடு முன்னெடுக்கப்படுகிறது.
இந்தியப் பிரிவின் வணிகம்: இந்தியாவில் மது அல்லாத குளிா்பான தயாரிப்பில் முன்னணியில் திகழும் கோக-கோலா நிறுவனம், பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு நாடு முழுவதும் 14 ஆலைகளை இயக்கி வருகிறது. கோக-கோலா, தம்ஸ் அப், ஸ்ப்ரைட் உள்ளிட்ட 41 வகையான பானங்களை தயாரித்து, விநியோகிக்கிறது. கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் செயல்பாட்டு வருவாய் ரூ.4,310.17 கோடியாகப் பதிவாகியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

