டாடா, மாருதி சுசுகி, ஆடி கார்களின் விலை உயர்கிறது!
உயர்ந்து வரும் செலவினங்களின் பெரும்பகுதியை நிறுவனங்களே ஏற்றுக்கொண்ட போதிலும், மூலப்பொருட்களின் விலை உயர்வே வாகனங்களின் விலையை அதிகரிப்பதற்கான முக்கியக் காரணம்.

டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி மற்றும் ஆடி
புதுதில்லி: மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக விநியோகச் சங்கிலியில் பாதிப்புகள் ஏற்பட்டதும், உயர்ந்து வரும் செலவினங்களின் பெரும்பகுதியை நிறுவனங்களே ஏற்றுக்கொண்ட போதிலும், மூலப்பொருட்களின் விலை உயர்வே வாகனங்களின் விலையை அதிகரிப்பதற்கான முக்கியக் காரணம் என நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
மாருதி சுசுகி இந்தியா
மாருதி அதன் வாகனங்களின் சராசரி விலை சுமார் 0.31% அதிகரிக்கும் என்றும், இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.
நிதியாண்டின் முதல் பாதியில் ஏற்கனவே மூன்று முறை வாகனங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளன. இந்த மூன்று விலை உயர்வும் ஒட்டுமொத்தமாக 1 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு வாகன விற்பனை அளவில் வருவாய் கணிசமாக அதிகரித்த போதிலும், மாருதி சுசுகி தனது 2வது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 26.36% சரிந்து ரூ. 2,466.1 கோடியாக இருப்பதாக அறிவித்துள்ளது.
ஆடி இந்தியா
ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் வகையில், அதன் அனைத்து மாடல்களின் விலையை 2% உயர்வை அறிவித்துள்ளது.
ஆடி இந்தியாவின் பிராண்ட் இயக்குநரான பல்பிர் சிங் தில்லன் கூறுகையில், உயர்ந்து வரும் செலவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக 2% வரையிலான விலை திருத்தத்தை செயல்படுத்த உள்ளோம். எங்கள் வணிகத்தின் நீண்டகால நிலைத்தன்மையை பராமரிக்க இது அவசியம். மேலும், இந்த திருத்தத்தை நாங்கள் முடிந்தவரை அளவாக வைத்துள்ளோம்.
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதன் கார்கள் மற்றும் எஸ்யூவி ரக வாகனங்களின் விலை சராசரியாக 0.5 சதவீதம் உயர்த்தப்பட உள்ளன.
பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார வாகனங்கள் என அனைத்து வகை வாகனங்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும். இந்த விலை மாற்றம் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்படும் செலவினங்களை ஓரளவு ஈடுகட்டும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் செலவினங்களில் கணிசமான பகுதியை டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு தொடர்ந்து ஏற்றுக்கொண்டாலும், அதன் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களுக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு மேற்கொள்ளும் 4 வது விலை உயர்வு நடவடிக்கை இதுவாகும்.
பயணிகள் வாகன விற்பனை சரிவு
ஃபெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், நடப்பாண்டு பண்டிகைக் காலத்தில் பயணிகள் வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.16% சரிவடைந்து 7,48,616 வாகனங்களாக உள்ளது.
இருப்பினும், ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அனைத்து வகை வாகனங்களையும் சேர்த்து மொத்தம் 55.25 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.21% வளர்ச்சியாகும்.
கடந்த ஆண்டு 8,06,322 வாகனங்களுடன் ஒப்பிடுகையில், 2026 ஆண்டு பண்டிகைக் காலத்தில் பயணிகள் வாகன சில்லறை விற்பனை 7,48,616 வாகனங்களாகப் பதிவாகியுள்ளது. மின்சார வாகன விற்பனையில் ஆண்டுக்கு ஆண்டு 52.62% அதிகரித்து, இந்தப் பிரிவில் 5,09,667 வாகனங்கள் விற்பனையாகி, முதல் முறையாக ஐந்து லட்சம் என்ற இலக்கை கடந்தது.
Summary
Despite absorbing most of the inflated costs, companies announce price increase due to higher raw material costs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


