பங்குச்சந்தை: 2,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!
இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

பங்குச்சந்தை - ANI
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில் நேற்று (செவ்வாய்) விடுமுறையையடுத்து இன்று (நவ. 25) காலை பங்குச்சந்தை வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது.
காலை முதலே மிகப்பெரும் லாபத்துடன் பங்குச்சந்தைகள் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,436.89 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் பகல் 11.30 மணி நிலவரப்படி 1,950.93 புள்ளிகள் உயர்ந்து 84,386.92 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 561.90 புள்ளிகள் உயர்ந்து 25,911.55 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
நிதிச் சேவைகள், வங்கிகள், தகவல் தொழில்நுட்பத் துறைகளில் லாபம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நிஃப்டி50, சென்செக்ஸ் உயர்ந்தன.
நிஃப்டி50-ல் ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை அதிக லாபம் பெற்றன.
நிஃப்டி மிட்கேப் 0.5 சதவீதம் உயர்ந்தது, நிஃப்டி ஸ்மால்கேப் 0.26 சதவீதம் சரிந்தது.
துறை வாரியாக, நிஃப்டி தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், வங்கி, தனியார் வங்கி பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டன, அதேசமயம் நிஃப்டி மீடியா, மெட்டல் ஆகிய துறைகள் சரிவைச் சந்தித்து வருகின்றன.
சென்செக்ஸ் 30 பங்குகளில் டைட்டன் தவிர மற்ற நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
அமெரிக்காவின் முன்னணி ஏ.ஐ. சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் சிஇஓ-ஆக ஜென்சன் ஹுவாங் மீண்டும் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து உலக பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன.
Summary
Stock Market: Sensex at day high, surges 1,900 pts, Nifty tops 25,900
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

