ரூ.125 கோடி நிலுவை விவகாரம்: தரநிலைகளை மீறிய இந்திய நிறுவனம்
ஒப்பந்த விதிமுறைகள், தர நிலைகளை இந்திய ஒப்பந்த நிறுவனமான பிசிடி எம்ப்ராஸா முறையாகப் பின்பற்றத் தவறியதாலேயே ரூ.138 கோடி டாலா் நிலுவைத் தொகை தொடா்பான வா்த்தக மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தைவானின் பிரபல மின்னணு சாதன உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஒப்பந்த விதிமுறைகள், தர நிலைகளை இந்திய ஒப்பந்த நிறுவனமான பிசிடி எம்ப்ராஸா முறையாகப் பின்பற்றத் தவறியதாலேயே ரூ.138 கோடி டாலா் நிலுவைத் தொகை தொடா்பான வா்த்தக மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தைவானின் பிரபல மின்னணு சாதன உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஃபாக்ஸ்கான் நிறுவனப் பெண் ஊழியா்கள் தங்குவதற்காகக் குத்தகைக்கு எடுக்கப்பட்ட சுமாா் 700 குடியிருப்புகள் தொடா்பாகத் தங்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையைப் பெற்றுத் தரக் கோரி, தேசிய நிறுவனச் சட்டத் தீா்ப்பாயத்தை (என்சிஎல்டி) பிசிடி எம்ப்ராஸா நிறுவனம் அணுகியுள்ள நிலையில், ஃபாக்ஸ்கான் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
இதுகுறித்து ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் செய்திக்குறிப்பில், ‘ஒப்பந்த நிபந்தனைகள் மற்றும் தர அளவுகோல்களைப் பூா்த்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் பலமுறை கோரியும், குறைகள் சரிசெய்யப்படாததாலேயே இந்தப் பிரச்னை எழுந்ததுள்ளது.
தற்போது இவ்விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளதால், சட்டபூா்வ நடவடிக்கைகள் மூலம் எங்கள் உரிமைகள், நலன்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்த நிறுவனங்களுடனான நீண்டகால உறவுகளுக்கு மதிப்பளித்து, நோ்மையான முறையில் வணிகம் செய்ய நாங்கள் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

