பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு!சென்னை, புறநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை!5 தொகுதி இடைத்தோ்தல்: தடை கோரிய வழக்கில் இன்று தீா்ப்புதிருப்பரங்குன்றம் தீப வழக்குகள் இன்று விசாரணை!தமிழகத்தில் டிசம்பருக்குள் 100% ஹெச்பிவி தடுப்பூசி: பொது சுகாதாரத் துறைமக்களவை நவ. 30-இல் கூடுகிறது: மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா?தமிழகத்தில் 33 மருந்துகளில் தரக் குறைபாடு: ஆய்வில் கண்டுபிடிப்புநேபாள வெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியா்கள் மரணம்?விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

2 நாள் உயர்வுக்குப் பிறகு பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! ஐடி பங்குகள் 1% வீழ்ச்சி!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

stock market

பங்குச்சந்தை - ANI

Updated On :

கடந்த 2 நாள்களாக உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தைகள், வாரத்தின் கடைசி நாளான இன்று (நவ. 27, வெள்ளிக்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,093.24 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 371.20 புள்ளிகள் சரிந்து 83,957.39 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 92.15 புள்ளிகள் குறைந்து 25,792.35 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

ஐடி பங்குகள் சரிந்ததாலும் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரித்ததாலும் இந்தியாவின் மீது அமெரிக்க வரி விதிப்பினாலும் இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நிஃப்டி50-ல் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், இன்ஃபோசிஸ் ஆகியவை அதிக சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி மிட்கேப் 100, நிஃப்டி ஸ்மால்கேப் 100 முறையே 0.43 சதவீதம், 0.30 சதவீதம் உயர்ந்தன.

துறைவாரியாக, நிஃப்டி ஐடி பங்குகள் அதிக சரிவைச் சந்தித்தது, அதே நேரத்தில் நிஃப்டி மெட்டல் அதிக ஏற்றம் கண்டது. பொதுத்துறை வங்கிகள், ரியல் எஸ்டேட் பங்குகளும் உயர்ந்த நிலையில் மற்ற துறைகள் சரிந்து வருகின்றன.

Summary

Stock Market: Sensex drops 400 pts, Nifty below 25,800

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.